மதுரையிலிருந்து புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு காசி விமான சுற்றுலா

by Editor / 23-08-2022 04:59:16pm
மதுரையிலிருந்து புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு காசி விமான சுற்றுலா

புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது. 

 6 நாட்கள் சுற்றுலா செப்டம்பர் 24 அன்று மதுரையில் இருந்து துவங்குகிறது. 

விமான கட்டணம் உள்ளூர் போக்குவரத்து தங்குமிடம் உணவு பயண காப்பீடு உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 39,300 கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

 கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறும். 

அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம். 

 8287931977 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். 
www.irctctourism.com என்ற இணையதளம் மூலமும் பயண சீட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம்.

 

Tags :

Share via