வலுவான கட்டமைப்பை அமைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்கிறார் -வைகோ பேட்டி

by Editor / 26-08-2022 11:10:15pm
வலுவான கட்டமைப்பை அமைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்கிறார் -வைகோ பேட்டி

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

திராவிட மாடல் அரசை சகோதரர் மு.க.ஸ்டாலின் எதிர்காலத்திற்கு ஒளிமயமான சூழலை தமிழ்நாட்டிற்கு உருவாக்குவதற்கான அடிப்படை வேலைகள் அனைத்தையும் செய்து வருகிறார் என்பதால் தான் மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடபப்பட்டிருக்கிறது. அவர் சொன்னதைப் போல பேரிடர் காலத்தில் சொல்லாததையும் செய்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியையும் வளர்ச்சி பாதையிலே கொண்டு வந்திருக்கிறார். ஆகவே நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் திராவிடம் மாடல் அரசுக்கு செல்வாக்கு வளர்ந்துக் கொண்டிருக்கிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்துத்துவா சக்திகள் கோட்சே உருவம் பொறித்த உருவத்தை ஏற்பாடு செய்து சுதந்திர தினத்தன்று இந்தூரில் கோட்சே வாழ்க என்று கொண்டாடினார்கள், மகாத்மாவை சுட்டுக்கொன்ற கொடியவனுக்கு ஊர்வலம் எடுக்கின்ற அளவுக்கு வடநாட்டில் இந்துத்துவா சக்திகள், சங்பரிவார் சக்திகள் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று சொல்ல கூடிய அளவிற்கு மத்திய சர்க்கார் நினைக்கின்றவர்களுக்கு கொடுக்கின்ற வகையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை இதை தடுப்பதற்கு திராவிட இயக்கங்கள், முற்போக்கு சக்திகள், இடதுசாரி சக்திகள் ஒன்றாக சேர்ந்து இன்னும் வலுவான கட்டமைப்பை அமைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்கிறார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

பில்கிஸ் பானு விவகாரத்தில் குற்றவாளிகள் விடுதலை குறித்த கேள்விக்கு:

மிகப்பெரிய கொடுமை க, கண்டனத்திற்குரியது கொலை செய்த கொலைகாரர்களை விடுதலை செய்து அந்த அரசினுடைய கொடூர மனப்பான்மையை, கோர சிந்தனையை தான் இது காட்டுகிறது.

மத்திய அரசு அதானி அம்பானி குடும்பத்திற்கு ஆதரவளித்து விலைவாசியை மக்கள் தலையில் ஏற்றுவது குறித்த கேள்விக்கு:என்டி டிவியை தற்போது அதானி வாங்கப் போவதாக செய்தி வந்துள்ளது. ஊடகங்களை கைப்பற்றி இந்த நாட்டை சர்வாதிகாரப் பாதையிலே, இதேச்சதிகாரபாதையில் கொண்டு சென்று அதிலும் இந்து துவா சக்திகளின் கையில் இந்த நாட்டை ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை கடுமையாக எடுக்க வேண்டியது திராவிட இயக்கத்தினுடைய தலையாயக் கடமையாகும்.

பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு குறித்த கேள்விக்கு:

நீதிமன்றத்தில் உண்மை வெளிவரும் ஸ்ரீமதி விவகாரத்தில் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள் நீதி நிலைநாட்டப்படும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த ஆட்சியில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு:

இந்த ஆட்சியில் மட்டுமல்ல போனாட்சியிலும் கொலைகள் நடைபெறத்தான் செய்தது. இளைஞர்கள் எளிதாக ஆயுதங்களை எடுப்பதும், கொலை செய்வதும் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலைமை இல்லை, இதற்கு போதைப்பொருள் மிக முக்கியமாக காரணம். மதுவும், போதையும் அடியோடு அகற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் மதுவை எதிர்த்து பிரச்சார பயணம் மேற்கொண்டு எங்கள் கிராமத்தில் மக்களை திரட்டி மதுக்கடையை உடைத்து, அதை நாங்கள் அகற்றினோம். இளையதர முறையை கெடுப்பதோடு இப்படிப்பட்ட படுகொலை நடப்பதற்கு காரணமாக இருக்கிறது.

நேத்தாஜிசுபாஷ் சந்திரபோஸ் நினைவு நாளை அனுசரிப்பது குறித்து எல்.முருகன் ட்வீட் குறித்த கேள்விக்கு:நேதாஜி எப்படி மறைந்தார் என்பது இன்றைக்கு வரை மர்மமாக இருக்கிறது. நான் அதைப் பற்றி ஆய்வு செய்து சிறையில் இருந்தபோது ஐந்து வாரம் தொடர்ந்து எழுதி இருந்தேன். எனவே இதைப்பற்றி அடிப்படை ஞானம் கூட இல்லாமல் உலகமே இன்னும் அதைப் பற்றி தெரிந்து கொள்ளாத நிலையில் நினைவு நாள் கொண்டாடுவது என்பது அவர்களுடைய அறியாமையை காட்டுகிறது.

 

Tags :

Share via