உதவி ஜெயிலர் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு.

by Editor / 28-08-2022 09:30:53am
உதவி ஜெயிலர் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு.

கடலூர்: மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்துடன் தீ வைத்துக் கொளுத்த முயற்சி.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி எண்ணூர் தனசேகரிடம் செல்போன் பறிமுதல் செய்ததால், அவர் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி அவர்கள்  மூலம் உதவி ஜெயிலர் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதால்  உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சி செய்ததாக  காவல்துறை தரப்பில் தகவல்.உதவி ஜெயிலர் குடும்பத்தினர் வேறு அறையில்தூங்கியதால் அனைவரும் உயிர் தப்பினர்.இது குறித்து கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.இந்த சம்பவம் காவல்துறை மற்றும்சிறைத்துறையினர்  வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு.

Share via