சைரஸ் மிஸ்திரி அகால மறைவு பிரதமர் மோடி இரங்கல்

by Editor / 04-09-2022 11:40:11pm
சைரஸ் மிஸ்திரி அகால மறைவு பிரதமர் மோடி இரங்கல்

சைரஸ் மிஸ்திரி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், சைரஸ் மிஸ்திரியின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இந்தியாவின் பொருளாதார வலிமையை நம்பிய ஒரு நம்பிக்கைக்குரிய வணிகத் தலைவராக இருந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via