லதா ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

by Editor / 06-09-2022 11:43:58pm
லதா ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

கோச்சடையான் பட தயாரிப்புக்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தாதது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.'கோச்சடையான்' பட தயாரிப்புக்காக பெற்ற 6.2 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தவில்லை என 2015ம் ஆண்டு லதா ரஜினிகாந்த் மீது, பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதியப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி 3 பிரிவுகளை ரத்து செய்தது. அதேசமயம் ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்த பிரிவில் கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராகவும், குற்றப்பத்திகையை முழுமையாக ரத்து செய்ய கோரியும் லதா ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo