தமிழக அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கிய நிலையை எதிர்த்து வழக்கு

by Admin / 08-09-2022 07:25:52pm
தமிழக அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கிய  நிலையை எதிர்த்து வழக்கு

தமிழக அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு கடந்த 2016ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.இச்சட்டப்படி பெண்களுக்கு 30%தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.இது தவிர மீதமுள்ள 70%இடங்களிலும் பெண்கள் போட்டியிட்டுஇடங்களை பெறும்நிலையை எதிர்த்தும் பெண்களுக்கு  தனி ஒதுக்கீடு  வழங்கிய  நிலையை எதிர்த்தும் பல வழக்குகள்  தொடுக்கப்பட்டன. இவ்வழக்குத் தொடர்பாக விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்பண்டாரிநாத் , நீதிபதி  மாலா அமர்வில் ,பெண்களுக்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில்  30% வழங்கிவிட்டு  பின்பு  சமூக அடிப்படையில் இடஒதுக்கீட்டை பின்பற்றும் தமிழகஅரசும் அரசு பணியாளர் தேர்வாணையமும் பின் பற்றுவது துரதிருஷ்டமானதுஎன்றும் இது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்றும் இதே நடைமுறையை பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை  ரத்து செய்வது முறையாகாது .தகுதி அடிப்படையில் பணி  நியமனம் பெறும் உரிமையை மறுக்க  முடியாது   என்றும்   உச்ச நீதிமன்றம்  உத்தரவுபடி முதலில் பொதுப்பிரிவுக்கும் அடுத்து சமூகப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்த பின்னர்,பெண்களுக்கானஇடஒதுக்கீடு பூர்த்தியாகத  பட்சத்தில்  எத்தனை  இடங்கள்  நிரப்ப வேண்டுமோ அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப  உத்திரவிட்டார். எதிர்காலத்தில்  தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும்  வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவர..அரசுக்கு அரசுக்கு ஆலோசனை வழங்கி வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்

 

Tags :

Share via