ஓணம் பண்டியையை முன்னிட்டு, கேரளாவில் ரூ.117 கோடிக்கு மது விற்பனை

by Editor / 09-09-2022 02:08:40pm
ஓணம் பண்டியையை முன்னிட்டு, கேரளாவில் ரூ.117 கோடிக்கு மது விற்பனை

ஓணம் பண்டியையை முன்னிட்டு, கேரளாவில் ரூ.117 கோடிக்கு மது விற்பனை செய்து அம்மாநில மதுபானக்கழகம் வருமானம் ஈட்டியுள்ளது.

கேரளாவில் ஓணப்பண்டிகைக்கு முந்தைய நாளில் வரலாறு காணாத வகையில் மது விற்பனை நடந்துள்ளது. நேற்று கேரளா முழுவதும் ஓணம் பண்டிகையையொட்டி, அரசு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 117 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. மாநில அளவில், கொல்லம் ஆசிரமம் விற்பனை நிலையத்தில் அதிக அளவில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் ஆசிரம விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1.6 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் திருவனந்தபுரத்தில் உள்ள பவர்ஹவுஸ் சாலை விற்பனை நிலையத்தில் ரூ.1.2 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

கடந்த முறை கேரளாவில் உள்ள பாவ்கோ மதுபானக் கடைகளில் ஓணம் தினத்தில் ரூ.85 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இம்முறை ரூ.117 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரூ.400 கோடிக்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories