இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கிற்கு 50 ஆயிரம் கோடி செலவு

by Staff / 16-09-2022 12:12:01pm
இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கிற்கு 50 ஆயிரம் கோடி செலவு

உலகில் எந்த நாட்டு ராணிக்கும் கிடைக்காத பெருமை ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உண்டு. 1952 ஆம் ஆண்டு அவர் பிரிட்டன் ராணியாக பதவியேற்றதை உலக மக்கள் தொலைக்காட்சியில் கண்டு களித்தனர். 70 ஆண்டுகளாக ராணியாக இருந்து செயல்பட்டதையும் உலக மக்கள் பார்த்தனர். தற்போது ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியையும் தொலைக்காட்சி வழியே பல கோடி மக்கள் காண உள்ளனர் என்பதும் வரலாறே.

ராணியின் மகனும் இளவரசருமான மூன்றாம் சார்லஸ் பிரிட்டன் அரசராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் நிர்வாக ரீதியான சில மாற்றங்கள் பிரிட்டனில் நடைபெற உள்ளன. அதற்கு முன்பாக ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குக்காக மட்டும் சுமார் 6 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 55 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுள்ளது.

பிரிட்டன் கரன்சி, பாஸ்போர்ட்டுகள், அரசின் ஆவணங்கள் என பிரிட்டன் அரசின் அலுவல் சார்ந்த அனைத்து ஆவணங்களிலும் இதுவரை இடம் பெற்று வந்த ராணி எலிசபெத்தின் படங்களுக்கு மாற்றாக புதிய அரசர் சார்லஸின் பெயரும், படமும் இடம் பெறும் வகையில் புதிதாக அச்சிடப்படும். இதற்காக பல்வேறு வகையிலான நிர்வாக செலவுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய கரன்சிகளில் இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற லிஸ் டிரஸ் -சின் படமும் இடம்பெற உள்ளது. இந்த மாற்றங்கள் நிறைவடைய பல ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றனர். இது தற்போது நெருக்கடியில் உள்ள இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு மறுமலர்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via