எப்போதெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்..எண்ணெயும் பலன்களும்

by Editor / 19-09-2022 09:23:42pm
எப்போதெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்..எண்ணெயும் பலன்களும்

எண்ணெய் தேய்த்து குளிக்க ஆண்களுக்கு பலன் பின்வருமாறு

ஞாயிறு *எண்ணைய் குளியல் ;- இருதயத்தில் தாபம் !!

திங்கள் எண்ணெய் குளியல் ;- பொழிவு தரும் மேனி

செவ்வாய் எண்ணெய் குளியல் ;- அற்பாயுள்

புதன் எண்ணெய் குளியல் ;- செல்வநிலை மேலோங்கும்

வியாழன் எண்ணெய் குளியல் ;- தரித்திரம் தாண்டவம் ஆடும்....

வெள்ளி எண்ணெய் குளியல் ;- ஆண்களுக்கு ஆபத்தை தரும்

சனி எண்ணெய் குளியல் ;- தீர்க்காயுள் தரும்

(சனி நீராடு என்று சொல்லியுள்ளார் ஒளவையார் )

சரி அதேபோல  பெண்களுக்கு ?
செவ்வாய் எண்ணெய் குளியல் ;- பாக்ய விருத்தி தரும்

வெள்ளி எண்ணெய் குளியல் ;- செளபாக்கியவதி ஆக வாழ்வார்கள்

இவ்வாறாக ஆண் பெண் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் !!

"தசமி ! பஞ்சமி ! திருதியை ! சப்தமி ! துவிதியை ! ஆகிய நாட்கள் சேர்ந்து வந்தால் ? சந்ததி விருத்தி இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் உள்ளது !!

உடல்நல குறை உள்ளோர்கள் மேற்படி திதி கலந்த சனிக்கிழமைகளில் (ஆண்கள்) எண்ணெய் குளியல் செய்ய ? ஆயுள் விருத்தி ! மற்றும் நோய் நிவர்த்தி உண்டாகும் !!

இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் ?

பிரதமை திதி ! சதுர்த்தி திதி (4) ! சஷ்டி திதி ! நவமி திதி ! சதுர்த்தசி திதி (14) ! அமாவாசை திதி ! ஆகிய திதிகளில் எண்ணெய் குளியல்கள் செய்யின் ? 

ஆயுள் குறைவு ஏற்படும் ! புத்தி குறையும் ! உடல் வலிமை இழக்கும் ! செல்வநிலை நாசத்தை அடையும் !!

தவிர்க்க முடியாமல் சாதகமான நாட்களில் இந்த திதிகள் கலந்து வந்தால் ? 

சிறிதளவு நெய் (தலையில் நரைமுடி விழும் என்கிறார்கள் ) அல்லது தண்ணீர் கலந்து எண்ணெய் உடன் கலந்து தேய்க்கலாம் ! ஜென்ம ! அனுஜென்ம ! திரி ஜென்ம நட்சத்திரம் அமைந்த நாட்களில் ? மற்றும் தமிழ்மாத முதல் தேதி ! மற்றும்  கேட்டை ! உத்தர ! திருவோணம் ! திருவாதிரை ! போன்ற நட்சத்திரம் அமைந்த நாட்களில் ? எண்ணெய் தேய்த்து குளிக்க ? செல்வநிலை நாசமும் ! ஆயுள் குறைவும் அமையும் ! ஆகவே ? இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் !!

இதிலும் ஆண்கள் வியாழக்கிழமை எண்ணெய் குளியல் ஆகாது ! என்று சொன்னாலும் ? அந்த வியாழக்கிழமை ஆனது சுவாதி நட்சத்திரம் கூடிய வியாழன் ! திருதியை திதி கூடிய வியாழன் ! பஞ்சமி திதி கூடிய வியாழன் ! எண்ணெய் தேய்த்து குளிக்க ? ஆரோக்கியமான உடல்நலம் ! செல்வநிலை மேன்மைகள் ! ஆயுள் தீர்க்கம் உருவாகும் ! என்பது குறிப்பிட தக்கது !!

இதில் பெண்களுக்கு மிகமிக முக்கியமாக சொல்ல வேண்டியது ? தயவுசெய்து நீங்கள் செவ்வாய்க்கிழமை ! வெள்ளிக்கிழமை ! தவிர வேறு நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிருங்கள் ! உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் ! உங்கள் மனதில் நிம்மதி ! தீர்க்க சுமங்கலி யோகத்தை இவைகள் தரும் !!

 

Tags :

Share via