100 காதல் ஜோடிகளிடம் கைவரிசை 10 நடிகைகளுடன் உல்லாசம் சிக்கியது எப்படி

by Staff / 22-09-2022 04:19:07pm
100 காதல் ஜோடிகளிடம் கைவரிசை 10 நடிகைகளுடன் உல்லாசம் சிக்கியது எப்படி

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் நபரை பிடிக்க காதல் ஜோடிகள் போன்று மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நகை பறிக்க வந்த மர்ம நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் சிவராமன் (38) என்பதும், நெடுஞ்சாலைகளில் காரில் அமர்ந்திருக்கும் ஜோடிகளிடம் தான் போலீஸ் என கூறி மிரட்டி நகை பறித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், காதல் ஜோடிகளிடம் பறித்த நகைகளை விற்பனை செய்து துணை நடிகைகளிடம் உல்லாசம் அனுபவித்து வந்ததும் அம்பலமானது.

இந்த நபர் மீது செங்கல்பட்டு, கடலூர், தாம்பரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் 45 வழக்குகள் இருப்பது உறுதியானது. வழிப்பறி செய்யும் சிவராமன் பாலியல் புரோக்கர்கள் மூலம் சின்னத்திரை நடிகைகள் சிலருடன் ஒரு மணிநேரத்திற்கு 40 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவு செய்து உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார்.நான் இதுவரை முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொப்பாளினிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை உல்லாசத்திற்காகவே செலவு செய்துள்ளேன். பெரும்பாலான பணத்தை நடிகைகளுக்கு தான் செலவு செய்தேன் என ஒப்புக்கொண்டார்.

 

Tags :

Share via