அமெரிக்க ராணுவத்தில் ஹிஜாப், தொப்பி, தாடி மற்றும் தலைப்பாகையை அனுமதிக்க திட்டம்

by Staff / 24-09-2022 02:25:32pm
அமெரிக்க ராணுவத்தில் ஹிஜாப், தொப்பி, தாடி மற்றும் தலைப்பாகையை அனுமதிக்க திட்டம்

அமெரிக்க ராணுவத்தில் ஹிஜாப், தொப்பி, தாடி மற்றும் தலைப்பாகை ஆகியவற்றை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்க இராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் ஹிஜாப்கள், தொப்பிகள், தலைப்பாகைகள் மற்றும் தாடிகளை அணிவதை சட்டப்பூர்வமாக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

1981 முதல், ராணுவத்தில் இதுபோன்ற மதச் சின்னங்களை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2020 இல் அமெரிக்க இராணுவம் மற்றும் விமானப்படை இந்த விதிகளை மாற்றியது. இப்போது அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப்படையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர் மதச் சின்னங்களை அணிந்திருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.இதற்கிடையில், அமெரிக்க கடற்படையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மதச் சின்னங்களை சமமாக அணிய அனுமதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via