தவறுதலாக விடப்பட்ட பொருட்களை கண்டெடுத்தால் 48 மணி நேரம் தான்... மீறினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை

by Staff / 26-09-2022 12:04:58pm
தவறுதலாக விடப்பட்ட பொருட்களை கண்டெடுத்தால் 48 மணி நேரம் தான்... மீறினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை

ஐக்கிய அரபு அமீரக சட்டம் பொதுவகவே மிக கடினமானதாக இருக்கும். இந்நிலையில், பொதுவெளியில் தவறவிட்ட பொருட்கள் தொடர்பாக கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது அந்நாட்டு அரசு. பொது வெளியில், தவறுதலாக விடப்பட்ட பொருட்களை கண்டெடுத்தால், அதனை 48 மணி நேரத்திற்குள் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அத்தகைய பொருட்களை வைத்திருந்தால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். வேறொருவருக்கு உரிமையான பொருட்களை எடுத்துச் செல்வோருக்கு 20,000 திர்ஹாம் அபராதம், அதாவது நான்கு லட்சம் இந்திய ரூபாய்க்கு மேல் அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via