அல்வா கொடுத்த அமுதசுரபி வங்கி கண்ணீர்வடிக்கும் வாடிக்கையாளர்கள்!

by Editor / 29-09-2022 08:35:57am
அல்வா கொடுத்த அமுதசுரபி வங்கி கண்ணீர்வடிக்கும் வாடிக்கையாளர்கள்!

தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் மத்திய அரசின் அனுமதி பெற்ற வங்கி என கூறி வாடிக்கையாளர்களுக்கு அல்வா கொடுத்து  அமுதசுரபி வங்கி ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை தலைமையிடமாக கொண்டது “அமுதசுரபி” சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம், தமிழகம் முழுவதும் வங்கி கிளைகள், ஏடிஎம்கள் திறந்து வாடிக்கையாளர்களிடம் தினசரி, மாத சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதியை வசூலித்து வந்தது.

செங்கோட்டை, தென்காசி,கடையம்,வாசுதேவநல்லூர், என தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில வருடங்களுக்கு முன் வங்கி திறக்கப்பட்டது. வங்கி முன் இந்திய அரசின் அனுமதி பெற்ற நிறுவனம் என விளம்பரப்படுத்தியுள்ளனர். கடைகளுக்கே சென்று தினசரி வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்ததால் வியாபாரிகள் தினசரி 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வங்கியில் செலுத்தி வந்தனர். 2 மாதம் முதல் ஐந்து மாதங்கள் வரை பணம் செலுத்தியவர்களுக்கு வட்டியுடன் பணம் வழங்கப்பட்டு வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.மேலும் இந்த வாங்கி கொடுத்த ஏ.டி.எம் அட்டையில் புகழ் பெற்ற மகளிர் குழுவான  பிரபல குழுவின் பெயரும் இருந்ததால் வாடிக்கையாளர்கள் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி முதல் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்குவதை தாமதப்படுத்தி வந்துள்ளனர். முதிர்வு தொகையையும் தரவில்லை. வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இரவோடு இரவாக வங்கியை பூட்டி போர்டுகளை கழட்டி விட்டு எஸ்கேப் ஆனது.தினசரி வசூல் செய்வதற்கு மட்டும் உள்ளுர் நபர்களை வேலைக்கு அமர்த்திய அமுதசுரபி வங்கி அலுவலர்கள் அனைவரும் வெளியூர் நபர்களாக அமர்த்தியுள்ளனர்.  மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சுமார் 3 முதல் 3 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.


வங்கி நிர்வாகம் ஏமாற்றியதால் வியாபாரிகள் பலரும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இரவோடு மூடப்பட்டதால் வங்கி முன் வாடிக்கையாளர்கள் திரண்டு தங்களது பணத்தை திருப்பி தர வலியுறுத்தி போராட்டம் நடத்தி கடந்த வாரம் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்இணையத்தளம் மூலம் புகார் செய்து செங்கோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கும் சென்றனர்.போலீசார் வாடிக்கையாளர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். வியாபாரிகள் தரப்பில் கூறுகையில் வட்டிக்கு ஆசைப்பட்டு நாங்கள் பணம் செலுத்தவில்லை, தேடி வந்து வசூல் செய்தனர். முடிவில் குறிப்பிட்ட தொகை ரொக்கமாக கிடைக்கும் என நம்பி முதலீடு செய்தோம், எனவே தமிழக அரசு பணத்தை திருப்பி வாங்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்என்கின்றனர்.மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த வங்கிகளால் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via