ஊராட்சிமன்றத்தலைவரை கண்டித்து கிராமசபையை புறக்கணித்த கிராம மக்கள்

by Editor / 02-10-2022 10:16:19pm
ஊராட்சிமன்றத்தலைவரை கண்டித்து கிராமசபையை புறக்கணித்த கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காலாங்கரைப்பட்டி ஊராட்சியில் இருக்கும் கெச்சிலாபுரத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி ஊராட்சி மன்ற தலைவர் கனகலட்சுமி தலைமையில் ஊராட்சி செயலாளர், மக்கள் நலப்பணியாளர் என 5 பேர் கிராம சபை கூட்டம் நடத்த அமர்ந்து இருந்தனர். ஆனால் கொச்சிலாபுரத்தினை சேர்ந்த மக்கள் யாரூம் வரவில்லை, அது மட்டுமின்றி ஊராட்சி மன்ற துணை தலைவர், 6 உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை, ஊராட்சி மன்ற தலைவர் ஒப்பந்த வேலைகளுக்கு டெண்டர் வைப்பதில்லை என்றும், நீர்வடிப்பகுதி திட்டத்தின் கீழ் அரசு மக்களுக்கு வழங்கிய தார்பாய்கள், மருந்து தெளிப்பான்கள், தையல் இயந்திரம் என எல்லா பொருள்களையும் ஊராட்சி மன்ற தலைவர் பயனாளிகளுக்கு வழங்கவில்லை என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தில் மக்களிடம் 100 ரூபாய் வசூல் செய்வதாகவும், இப்படி பல்வேறு முறைகேடுகளில் ஊராட்சி மன்ற தலைவர் ஈடுபட்டு வருவதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய சொல்லி ஊராட்சி மன்ற துணைத்தலைவர், 6 உறுப்பினர்கள் புகார் செய்து எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கிராம சபை கூட்டத்தினை ஒட்டு மொத்தமாக புறக்கணித்தாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 
 

 

Tags :

Share via