பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்

by Staff / 04-10-2022 11:59:49am
 பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்து சில நாட்களாக பெய்த மழையால் குருவை நெல் சாகுபடி செய்த சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெருப்பயிர்கள் மூழ்கி சேதுமடைந்துள்ளது இது போலவே தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 35 ஆயிரம் எழுப்பிடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவே இந்த அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நிரந்தர மற்றும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உடனடியாக திறந்திட வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் ஒரு குவிந்தால் நெல்லுக்கு ரூபாய் 2500 வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கை வாக்குறுதி படி தமிழக அரசு வழங்கிட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்

 

Tags :

Share via