122 ஆண்டுகளில் இந்தாண்டு அதிகளவில் பெய்த தென்மேற்கு பருவ மழை.

by Editor / 07-10-2022 08:12:31am
 122 ஆண்டுகளில் இந்தாண்டு அதிகளவில் பெய்த தென்மேற்கு பருவ மழை.

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 3 நாட்களுக்கு பரவலாக கன மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் ஒங்கோல் அருகே வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகன்று வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவள்ளூர், திருவண்மலை, வேலூர், விழுப்புரம், சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 477 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இயல்பான அளவை விட 45 சதவீதம் அதிகம் ஆகும். தமிழகம், புதுவையில் தென்மேற்கு காலத்தில் இயல்பாக 328 மி.மீ மழை பதிவாகும். குறிப்பாக, கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் பெய்த மழை அளவுகளில் இதுதான் அதிகபட்சம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via