ராணுவ தேர்வு மோசடி செய்து தேர்வு எழுதிய 29 பேர் மீது வழக்கு

by Staff / 10-10-2022 11:42:55am
ராணுவ தேர்வு மோசடி செய்து தேர்வு எழுதிய 29 பேர் மீது வழக்கு

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ பள்ளியில்நேற்று நடைபெற்றது.டேபின்ஸ் சிவிலியன் ரெசிறுஇடமென்ட் குரூப் சி எக்ஸாம்  இந்த தேர்வில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 1,728 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வில் கலந்து கொண்ட ஒரு சிலர் மீது ராணுவ அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்ட்டதையடுத்து அந்த இளைஞர்களை சோதனை மேற்கொண்டனர். அப்போது அரியானா மாநிலத்தை சேர்ந்த சுமார் 29 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத் டிவைஸ் பயன்படுத்தி தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் பெயர் தெரியாத நபர் உதவியுடன் வினாக்களை தெரிவித்து விடைகளை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராணுவ மருத்துவமனை சுபேதார் ஸ்ரீதர் தலைமையில் 10 ராணுவத்தினர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி செய்து தேர்வு எழுதிய 29 பேர் மீதும் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம் செய்தவர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ப்ளூடூத் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ப்ளூடூத் சாதனங்களை 10,000 முதல் 15,000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கியதாக கூறியுள்ளனர்.

 

Tags :

Share via