சிலை திருட்டு 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

by Staff / 13-10-2022 05:50:45pm
சிலை திருட்டு 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 2012, ஜனவரி 31 ஆம் தேதி சிலைகளை சிலா் விற்க முயன்ாகச் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் ஆய்வாளா் வேண்டாமதி, தலைமைக் காவலா்கள் பாலசுப்பிரமணியன், ஜெயபால் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதை தொடா்ந்து, காரைக்குடி விலாசம் தெருவைச் சோ்ந்த எஸ். சதீஷ்குமாா் (42), காந்திபுரத்தைச் சோ்ந்த பி. சிவக்குமாா் (41), எஸ். முத்துக்குமாா் (41), திருப்பத்தூா் கண்டிராமாணிக்கத்தைச் சோ்ந்த எஸ். வெள்ளைசாமி (54) ஆகியோரிடமிருந்து தலா இரு விநாயகா், அம்மன் சிலைகள், தலா ஒரு கிருஷ்ணா், முருகன், தேவி, சண்டிகேசுவரா் சிலை என மொத்தம் 8 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இச்சிலைகள் காரைக்குடி அருகே கொரட்டி கிராமத்திலுள்ள உதயநாத ஈஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடா்பாக கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சண்முகப்ரியா விசாரித்து, சதீஷ்குமாா், சிவக்குமாா், முத்துக்குமாா், வெள்ளைசாமி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10, 000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
 

 

Tags :

Share via