சத்யா யாருக்கும் கிடைக்கக் கூடாது

by Staff / 14-10-2022 05:27:43pm
சத்யா யாருக்கும் கிடைக்கக் கூடாது

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (47). இவரது மனைவி ராம்லட்சுமி (43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் சத்தியப்பிரியா (20). இவர் தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

சத்யபிரியாவை ஆலந்தூர் ராஜா தெருவில் வசிக்கும் ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரி தயாளன் என்பவரது மகன் சதீஷ்(23) என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார். மாணவி சத்யபிரியா காதலிக்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனது தோழியுடன் வந்த சத்யாவிடம் சதீஷ் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில், தண்டவாளத்தில் தள்ளி விட்டதால் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சிக்கி சத்தியா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே மகள் இறந்த சோகத்தில் தந்தை மாணிக்கமும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் தப்பி ஒடிய சதீஷ் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றி கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷை ரெயில்வே போலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சதீஸிடம் போலிஸ் நடத்திய விசாரணையில், “உயிரிழந்த மாணவியை சிறுவயது முதலே எனக்கு தெரியும். சில நாட்களுக்கு பிறகு நாங்கள் அவர்கள் வசித்த குடியிருப்பு பக்கத்தில் உள்ள இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்டோம்.

பின்னர் மாணவி மீது காதல் ஏற்பட்டு, அவரிடம் தெரிவித்தபோது அவர் ஏற்கமறுத்து பெற்றோரிடம் கூறியதால் காவல்நிலையத்தில் என்னுடைய பெற்றோர் மீது என்மீது புகார் அளித்தனர். பின்னர் எந்த பிரச்சனையும் செய்யகூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவம், நடந்த அன்று அவரிடம் பேசுவதற்காக வந்தபோது, அவள் காதலை ஏற்கவில்லை என்பதால அவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டேன். பின்னர் அங்கிருந்தவர்கள் துரத்தியதால், அங்கிருந்து தப்பித்து சென்றேன்” எனக் கூறியுள்ளார்.

 

Tags :

Share via