பால் விலை அதிரடி உயர்வு

by Staff / 16-10-2022 02:15:55pm
பால் விலை அதிரடி உயர்வு

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இவை நாடு முழுவதும் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. இந்நிலையில், அமுல் பால் மற்றும் எருமை பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்ய அந்த அமைப்பு முடிவெடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் தலா 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வையடுத்து, முழு கொழுப்பு நிறைந்த பால் விலை லிட்டருக்கு 61 ரூபாயில் இருந்து 63 ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via