பெண்களை பலாத்காரம் செய்ய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷியா.

by Staff / 17-10-2022 03:20:37pm
பெண்களை பலாத்காரம் செய்ய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷியா.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இதனையடுத்து உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். இந்த போரில் பாலியல் வன்முறை தொடர்பாக ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார். உக்ரைனில் பலாத்காரம் ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டபோது, "எல்லா அறிகுறிகளும் உள்ளன" என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via