தமிழகத்தில் அக். 25ம் தேதி விடுமுறை

by Staff / 20-10-2022 03:54:49pm
தமிழகத்தில் அக். 25ம் தேதி விடுமுறை

இந்த வருடம் தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை (அக்.24) வரவுள்ளது. அதற்கு முதல் இரண்டு நாள் பள்ளிகளுக்கு சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் ஆகும். அடுத்த நாள் திங்கட்கிழமை பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை இந்த ஆண்டு இருக்கிறது. பிறகு பண்டிகைக்கு அடுத்த நாள் செவ்வாய் கிழமை (அக்.25) வேலை நாளாக உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் தீபாவளி முடிந்த அன்றைய தினமே மீண்டும் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.

மேலும் அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் ஊர் திரும்புவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும். அத்துடன் பணிக்கு செல்பவர்கள் தீபாவளி மறுநாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். அதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் செவ்வாய் கிழமை (அக்.25) அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து வெளியான தகவலின் படி தீபாவளிக்கு அடுத்த நாள் 25 ஆம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை அறிவிப்பு வந்தால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு 4 நாட்கள் தீபாவளி விடுமுறையாகும்.


 

 

Tags :

Share via