மின்சாரம் வாரியம் குறித்து வரும் குறுந்செய்தியை நம்பவேண்டாம்.

by Admin / 21-10-2022 09:10:41pm
மின்சாரம் வாரியம் குறித்து வரும் குறுந்செய்தியை நம்பவேண்டாம்.


மின்சாரம் வாரியம் குறித்து வரும்  குறுந்செய்திகளை நம்பவேண்டாம் என்று காவல்துறைத்தலைவர் சைலேந்திர பாபுகேட்டுக்கொண்டுள்ளார். தொலைபேசியில் பேசி மோசடி செய்தது போல் தற்பொழுது இணையத்தின் வழி குறுந்செய்திஅனுப்பி பண மோசடி நடைபெறுவதாகவும் அதனால் யாராவது மின்சாரவாரியம் அனுப்புவதுபோல,நீங்கள் மின்கட்டணம் செலுத்ததால் இன்று இரவுக்குள் உங்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்படுமென்று சொல்லி,ஒரு தொலைபேசி எண்ணை தந்து அதில் பேசுங்கள் என்பார்.அந்த எண்ணில் தொடர்பு கொண்டாகொஞ்சநேரத்தில்கூப்பிடுவதாகச்சொல்லி,பின்பு உங்களைத்தொடர்பு கொண்டு உங்கள் மின் இணைப்பு குறித்து,நீங்கள் கட்டிய பணம் பற்றி எல்லாவிபரமும் சொல்லி ஒரு ஆப்பை பதவிறக்கம் செய்து பத்து ரூபாய் கட்ட சொல்லுவார்கள்.அதில் நீங்கள் பத்து ரூபாய்தானே என்று கட்டினால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து மொத்தப்பணத்தையும் எடுத்துவிடுவார்கள்.அவர்களைகாவல்துறை பிடிக்கவேண்டுமானால் 100,112,அல்லது காவல் உதவி ஆப்பை பயன்படுத்துங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

 

Tags :

Share via