ராணுவ வீரருக்கு அடி, உதை

by Staff / 22-10-2022 01:52:19pm
 ராணுவ வீரருக்கு அடி, உதை

கேரளாவின் கொல்லம் அருகே கிளிகொல்லூர் வழக்கில் ராணுவ வீரர் விஷ்ணு மற்றும் அவரது சகோதரர் விக்னேஷ் ஆகியோரை போலீசார் தாக்கியதை நிரூபிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. படுகாயம் அடைந்த இளைஞர்களை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான நண்பர்களை சந்திக்க வந்த ராணுவ வீரர் விஷ்ணுவும், அவரது சகோதரரும் கிளிகொல்லூர் காவல் நிலையத்துக்குள் புகுந்து ஏ.எஸ்.ஐ.யை அடித்து உதைத்தாக கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீசாரே பல பொய்யான கதைகளை புனைந்துள்ளதாகவும், ஆனால் அதையெல்லாம் சமீபத்தில் வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சிகள் முறியடித்துள்ளன.

அந்த வீடியோவில், காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. அடிபட்டதை மருத்துவர்களிடம் கூறக்கூடாது என்றும் போலீசார் மிரட்டியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு இந்த சம்பவம் நடத்தது.

இச்சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் மற்றும் அவரது சகோதரருக்கு நீதி கேட்டு கிளிகொல்லூர் காவல் நிலையம் முன்பு முன்னாள் ராணுவத்தினர் பேரணி மற்றும் தர்ணா நடத்தினர். மேலும், இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கங்களிலும் கேரள இளைஞர்கள் இந்த விவகாரத்தில் ராணுவம் தலையிட்டு நீதி பெற்றுத்தர வேண்டும் என வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.கேரள காவல்துறையின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து தலையிடக் கோரி சமூக வலைதளங்களில் பிரச்சாரம் நடந்து வருகிறது. இளைஞர்களை போலீசார் சரமாரியாக அடிக்கும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via