ஆவின் பால் தரம் குறித்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு

by Staff / 22-10-2022 03:10:48pm
ஆவின் பால் தரம் குறித்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு

சென்னை நந்தனத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, 14 -ஆவின் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஆவின் மூலம் ரூ 80 கோடி வரும் என எதிர்பார்த்த நிலையில், ரூ 110 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது . ஆவின் பொருட்கள் தரம் குறித்து தனியார் போட்டி நிறுவனம் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பி வருகிறது. ஆவின் பொருள்கள் பல்வேறு கட்ட தர பரிசோதனைக்குப் பின்னரே மக்களை சென்றடைகிறது. ஆவின் பொருட்களில் புழு, பல்லி மற்றும் பூச்சி உள்ளிட்ட கிருமிகள் இருப்பதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்புகின்றனர்" என குற்றம்சாட்டினார்.

 

Tags :

Share via