பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

by Editor / 21-02-2023 10:16:47pm
பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூச திருவிழா ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆலயத்தில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி தலைமையில் எண்ணப்பட்டது.இதில் ஒரு கோடியே 54 லட்சத்து 53 ஆயிரத்து 52 ரூபாய் ரொக்கம், 3 கிலோ 924 கிராம் தங்கம், 6 கிலோ 118 கிராம் வெள்ளி, அயல் நாட்டு நோட்டுகள் 172, அயல்நாட்டு நாணயங்கள் 627 காணிக்கையாக பெறப்பட்டன.இதேபோன்று 

கன்னியாகுமரி மாவட்டம்  மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக (19,16,789) பத்தொன்பது லட்சத்து பதினாறாயிரத்தி எழுநூற்றி எம்பத்தி ஒன்பது ரூபாய் 75-கிராம் தங்கம் 131-கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.இந்த 2 ஆலயங்களிலும் 1கோடியே 73 இலட்சத்து 69 ஆயிரத்து 841 ரூபாய் உண்டியல் காணிக்கையும்,3கிலோ 999 கிராம் தங்கமும்,6கிலோ 249 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
 

Tags :

Share via