சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்

by Staff / 01-11-2022 12:10:59pm
சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்

சந்திரகிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழுநிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. மேலும், நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும், மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் காணப்படும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திரகிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் காணலாம். முழு சந்திரகிரகணம் வருகிற 8ம் தேதி இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைகிறது. சென்னையில் மாலை 5.38-க்குத்தான் சந்திரன் உதயமாகும். எனவே முழு கிரகணத்தைக் காண இயலாது. ஆனால் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்குத் தொடுவானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம்.

 

Tags :

Share via