பாஜகவில் இணையும் உயர்நீதிமன்ற நீதிபதி

by Staff / 05-03-2024 03:51:04pm
பாஜகவில் இணையும் உயர்நீதிமன்ற நீதிபதி

கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி பொறுப்பை ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்தியாயா மார்ச் 7ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைய போவதாக அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து என்னை அணுகினார்கள் நானும் பாஜகவை அணுகினேன் என கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அடுத்த சில மணி நேரங்களில் பாஜகவில் இணையும் அறிவிப்பை வெளியிட்ட அபிஜித் கங்கோபாத்யாயா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via