இந்திய அமைச்சர் ஜெய்சங்கரை பாராட்டிய ரஷ்யா

by Staff / 05-03-2024 04:06:23pm
இந்திய அமைச்சர் ஜெய்சங்கரை பாராட்டிய ரஷ்யா

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பாராட்டு தெரிவித்துள்ளார். உக்ரைன் போரின் ஆரம்ப நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசினார். பொருளாதார தடைகளை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து ஏன் எண்ணெய் வாங்குகிறோம் என மேற்கத்திய தலைவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிலளித்தார். அதன்பிறகு அந்த நாடுகளும் எங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கின' என்றார் செர்ஜி.

 

Tags :

Share via