தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

by Staff / 23-10-2022 02:32:47pm
தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணம் பன்மடங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

 சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்கான டிக்கெட் கட்டணம் 6 ஆயிரத்து 500ல் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் கொல்கத்தாவுக்கு செல்ல 22 ஆயிரம் ரூபாயாகவும், பெங்களூரு செல்ல 6 ஆயிரம் ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று கொச்சி, திருவனந்தபுரம் மதுரை, கோவைக்கு செல்லவும் 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் கட்டண உயர்வால் அதிர்ச்சி அடைந்தனர்.

 

Tags :

Share via