பழங்குடியினபெண்ணிடம் அத்துமீறிய கேரளா வனத்துறையினர்.

by Editor / 26-10-2022 11:30:52pm
பழங்குடியினபெண்ணிடம் அத்துமீறிய கேரளா வனத்துறையினர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தலையணை பகுதிகளில் 43 பழங்குடியினமக்கள்  குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள்.  இவர்கள் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உள்ள காடுகளில் சென்று தேன் எடுத்தல், குங்குலியம், சுண்டைக்காய், கல்தாமரை மற்றும் சிறு வன மகசூல் சேகரித்து பல்வேறு தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்கள்,.இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி இப்பகுதியில் வசித்து வரும் ஈசன் மனைவி சரசு மற்றும் ராஜா ஆகிய இருவர்  வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கேரளா தமிழ்நாடு இருமாநில எல்லைப்பகுதியில்  செண்பகவல்லி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.இந்த நீர்த்தேக்கத்தில் தடுப்பு சுவர் ஓன்று இடிந்து விழுந்துள்ளதால்  தமிழகம் அதனை சீரமைத்து விடக்கூடாது என்பதற்காக கேரளா வனத்துறையினர் இந்தப்பாகுதியில் முகாமிட்டுள்ளனர்.இந்தப்பாகுதி முல்லைப்பெரியாறு பாதுகாக்கப்பட்ட வனப்பாகுதியில் வருவதால் இங்கு வனத்துறையினர் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இந்தப் பகுதியில் யாருமே வரக்கூடாது என கண்டிப்பதாகவும் சரசு என்பவரின் தோளில் வைத்திருந்த வன மகசூலை பிடித்து இழுத்தும்,தோள்பட்டையை பிடித்து இழுத்தும்  இங்கே  வரக்கூடாது என்று கண்டித்தும் அவமானப்படுத்தியதாக வாசுதேவநல்லூர் காவல்   நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.

 இது குறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம்  ,உதவிஆய்வாளர்விஜயகுமார்,கேரளா மற்றும் தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை ஏற்று கேரள வனத் துறை சார்ந்த முல்லைப்பபெரியார் கோட்டம் ரேஞ்சர் அகில் பாபு, கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வாசுதேவநல்லூர் காவல்துறை அதிகாரிகள் தலையணை பகுதியில் வசிக்கும் பளியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கா பாண்டியன், ராமராஜ் ஆகியோர் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தலையணையில் உள்ள  உள்ள பங்களாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் அக்டோபர் 23ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு பெரியார் புலிகள் காப்பாகத்தின் கோட்ட வன அலுவலர் அகில் பாபு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். 

மேலும் கேரளா வனத்துறை கார்டு பாகுலேயன் உள்ளிட்ட நான்கு நபர்களை வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்தி விசாரணை செய்வதாகவும்  உறுதியளித்தார். மேற்படி அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தமிழக வனத்துறை எல்கைக்குள் சோதனை செய்வதோ மரியாதை குறைவாக நடத்துவதோ அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்படும் எந்த ஒரு செயலிலும் ஈடுபட மாட்டோம் எனவும், தகவலை இனிவரும் காலங்களில் கேரளா வனத்துறை   யில் வரும் வனத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை கொடுத்து பணியில்  அமர்த்துவோம் என்றும், சில நேரங்களில் தமிழக எல்லையைத் தாண்டி கேரளா எல்கைக்குள்  பாதை நோக்கத்திற்காக வருபவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டோம் என்றும், சட்டத்தின் மேல் நம்பிக்கை இருப்பதால் இதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றும் கேரள வனத்துறையினர் கையெழுத்திட்டு கொடுத்தனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை வனப்பாகுதி வழியாக தேனிக்கு இடம்பெயர வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 

பழங்குடியினபெண்ணிடம் அத்துமீறிய கேரளா வனத்துறையினர்.
 

Tags :

Share via