மெட்ரோ ரயில் தலைமையகம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தனர்.

by Editor / 27-10-2022 08:52:25pm
மெட்ரோ ரயில் தலைமையகம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தனர்.

சென்னை நந்தனத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் ரூபாய் 365 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய தலைமை அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர். 

நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3.90 லட்சம் சதுர அடியில், 365 கோடி ரூபாய் செலவில், புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சி.எம்.ஆர்.எல் பவன் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தலைமை அலுவலகத்தில், 12 மாடிகளுடன் ஒரு கட்டடமும், தலா ஆறு மாடிகளுடன் இரண்டு கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.

இக்கட்டிடத்தில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், பணியாளர்களின் குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களுக்கான வாடகை தளம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த அலுவலகத்தில் மெட்ரோ ரயில் இயக்கம், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் ‘கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை விரிவுப்படுத்தப்பட்டு செயல்பட உள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்துக்கு தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சராசரியாக தினசரி 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via