செவ்வாய் கிரகத்தில் 150 மீட்டர் பெரிய பள்ளம்

by Staff / 29-10-2022 04:58:11pm
செவ்வாய் கிரகத்தில்  150 மீட்டர்  பெரிய பள்ளம்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் எதுவும் உள்ளதா? என்பதற்கான ஆதாரங்களை நாசா சேகரித்து வருகிறது. இதற்காக, தனிச் சிறப்பான செயற்கைக்கோள் மற்றும் ஆர்பிட்டரை நாசா செவ்வாய் கிரகத்தில் நிறுவியுள்ளது. கடந்த, 2005 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் மார்ஸ் ரெக்கோன்னாசிசன்ஸ் ஆர்பிட்டர் (MRO - Mars Reconnaissance Orbiter) செவ்வாய்கிரகத்தை தொடர்ந்து படம் எடுத்து வருகிறது. தற்போது அது எடுத்துள்ள படத்தில் செவ்வாய் கிரகத்தில் 150 மீட்டர் அகலமான ஒரு பெரிய பள்ளம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via