தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

by Editor / 21-08-2023 09:55:25am
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை அரியலூர் கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கக்கூடும்.

 

Tags : இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

Share via