50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம்” – போன்பே அறிவிப்பு

by Editor / 25-10-2021 07:40:03pm
50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம்” – போன்பே அறிவிப்பு

 

யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய முதல் டிஜிட்டல் பேமெண்ட் செயலி ‘போன்பே’ ஆகும்.


வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை(பேமெண்ட்) நிறுவனமான போன்பே (PhonePe), 50 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு 1 முதல் 2 ரூபாய் வரையிலான செயலாக்கக் கட்டணத்தை(processing fees) வசூலிப்பதாக அறிவித்துள்ளது.

இதனால்,யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய முதல் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி போன்பே நிறுவனம் ஆகும்.ஏனெனில்,அதன் போட்டியாளர்களான பிற பணம் செலுத்தும் செயலிகள் மொபைல் ரீசார்ஜ் பரிவர்த்தனைகளை இலவசமாக வழங்குகிறது.இந்த நிலையில்,போன்பே கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படும் ரீசார்ஜ் கட்டணங்களுக்கு செயலாக்கக் கட்டணத்தை(processing fees) வசூலிக்கிறது.

இது தொடர்பாக போன்பே செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: “ஒரு சில பயனர்கள் மொபைல் ரீசார்ஜ்களுக்கு பணம் செலுத்தும் மிகச் சிறிய அளவிலான பரிசோதனையை நாங்கள் நடத்தி வருகிறோம்.அதன்படி,50 ரூபாய்க்கு கீழ் உள்ள ரீசார்ஜ்களுக்கு கட்டணம் இல்லை.ஆனால்,ரூ.50 முதல் ரூ.100 வரையிலான மொபைல் ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும்,ரூ.100க்கு மேல் 2 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

ஆன்லைன் தளங்களில் கட்டணம் வசூலிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் அல்ல.மாறாக,பல நிறுவனங்கள் ஏற்கனவே ட்ஜிட்டல் தளத்தில் சிறிய அளவிலான தொகையை செயலாக்க கட்டணமாக வசூலிக்கின்றன.சிறிய கட்டணத்தை வசூலிப்பது இப்போது ஒரு நிலையான தொழில் நடைமுறையாகும்.ஆனால்,நாங்கள் கிரெடி கார்ட் மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கிறோம்”,எனத் தெரிவித்துள்ளார்.


ஜூலை மாதம் வெளியிடப்பட்ட பெர்ன்ஸ்டீன் அறிக்கையின்படி,போன்பே மற்றும் கூகுள் பே ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குவதில் தொடர்ந்து முதலீடு செய்கின்றன மற்றும் 2.5-3.0 மடங்கு சந்தைப்படுத்தலுக்கு செலவழிக்கின்றன.  அதேசமயம்,2017 நிதி ஆண்டில் 1.2 மடங்கு வருவாயிலிருந்து சந்தைப்படுத்துதல் செலவை பேடிஎம் குறைத்துவருகிறது.


அந்த வகையில், 2020 இல் 0.2 சதவிகிதமாகவும் செலவழிக்கும் தொகை குறைந்துள்ளது.எனினும்,யுபிஐ, பிஓஎஸ், இணை பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பேமெண்ட்கள் முழுவதும் கட்டணங்கள் தொடர் வளர்ச்சி கண்டுள்ளன.இதன் காரணமாக,இனி வரும் காலத்தில் அனைத்து விதமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via