இன்று முதல் டிஜிட்டல்கரன்ஸி அறிமுகமாகிறது.

by Admin / 01-11-2022 10:13:07am
இன்று முதல் டிஜிட்டல்கரன்ஸி அறிமுகமாகிறது.


இந்திய ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்ஸி எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துகிறது.உலகமுழுவதும் தற்பொழுதுகிரிப்டோகரன்ஸி பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் உலக வர்த்தகத்தில் ஈடுபட ஏதுவாக டிஜிட்டல் கரன்ஸியைஇந்தியாவும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு மத்திய ரிசர்வ் வங்கிடிஜிட்டல்கரன்சியை நடைமுறைக்குக்கொண்டு வரும் முதல் முயற்சி இன்று தொடங்குகிறது.இந்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா  பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி உட்பட, உள்நாட்டில் செயல்படும் ஒன்பது வங்கிகள் அடங்கும்இந்தியாவின் முக்கிய பயன்பாடானது, அரசாங்கப் பத்திரங்களில் இரண்டாம் நிலை சந்தைப் பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதாகும். டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை செலவுகளை குறைப்பதன் மூலம் வங்கிகளுக்கு இடையேயான சந்தையில் அதிக செயல்திறனை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது..

 

Tags :

Share via