முதலமைச்சரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 03-11-2022 04:53:16pm
முதலமைச்சரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் உள்ள தனது தாயாரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அவ்வவ்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.கடந்த மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் தொடர் பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அதே மருத்துவமனைக்கு மீண்டும் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.தனது தாயார் தயாளு அம்மாளின் உடல்நிலை, சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

 

Tags :

Share via