ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்..வளர்க்க முடியாது.. பெற்றோர் பிடிவாதம்.

by Editor / 05-11-2022 07:22:38pm
ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்..வளர்க்க முடியாது.. பெற்றோர் பிடிவாதம்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவர், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த அக்:  20ம் தேதி பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது. பிறந்த  குழந்தைகள்  எடை குறைவாக இருந்ததால், குழந்தைகள் நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழ்நிலை உள்ளதால், நீங்களே பராமரித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு இக்குழந்தைகள் வேண்டாம் என மருத்துவர்களிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பெற்றோரிடம் பேசியுள்ளனர். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக எங்களால் மூன்று குழந்தைகளையும் வளர்க்க முடியாது என்று பெற்றோர் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3 பெண் குழந்தைகளையும் கடந்த 15 நாட்களாக பராமரித்து வந்தனர்.

3 குழந்தைகளும் ஓரளவு எடை கூடிய பிறகு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளையும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம்  ஒப்படைக்கப்பட்டது.

இவர்கள் 60 நாட்களுக்கு குழந்தைகளை பராமரித்து வருவார்கள். அந்த நேரத்தில், பெற்றோர் மனது மாறி திரும்பி  வ ந்தால் குழந்தைகள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். அப்போதும், பெற்றோர் வராத பட்சத்தில் 3 குழந்தைகளையும் தத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றனர்.

 

Tags :

Share via