உள்ளாட்சித் தேர்தல் -முதல்வர் ஆலோசனை

by Editor / 22-06-2021 07:08:17pm
உள்ளாட்சித் தேர்தல் -முதல்வர் ஆலோசனை

 

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையைத் தவிர்த்த 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்று வருகிறது.தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், கே.என்.நேரு மற்றும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Tags :

Share via