மூதாட்டி இடம் 6. 45 லட்சம் மோசடி.

by Staff / 11-11-2022 05:06:23pm
மூதாட்டி இடம் 6. 45 லட்சம் மோசடி.

கோவை இருகூர் பவர் ஹவுஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி பேபி( 57). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் பேபியை, ஜேம்ஸ் எட்வின் என்ற நபர் தொடர்பு கொண்டு உள்ளார்.
அப்போது அவர் தான் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றும் இந்தியாவில் இடம் வாங்கி குடியேற விரும்புவதாகவும் கூறி இருக்கிறார். அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் படியும் தான் இந்தியா வரும்பொழுது பரிசு பொருட்கள் வாங்கி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2-ந் தேதி பேபியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் கஸ்டம்ஸ் ஆபீஸர் என்றும். உங்களுக்கு தெரிந்த நபரான ஜேம்ஸ் எட்வின் என்பவர் 87 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அனுமதி இன்றி கொண்டு வந்துள்ளார்.

அந்த பொருள்களை கஸ்டம்ஸ் வரி கட்டி மீட்க வேண்டும் என்றால் 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என கூறியிருக்கிறார். இதை நம்பி பேபி கஸ்டம்ஸ் ஆபீஸர் போல பேசிய நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு பேபியால்

அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை பேபி உணர்ந்தார். உடனே இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை நீலிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்(34). இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் மூலம் முதலீடு செய்து, ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை நம்பிய பிரவீன்குமார் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ. 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார்.

ஆனால் நிறுவனத்தினர் கூறியபடி அவருக்கு கூடுதல் லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த தொகையும் திருப்பித் தராமல் அந்த நிறுவனத்தினர் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து அவர் அந்த நிறுவனம் குறித்து விசாரித்தார். அப்போது இதே போல ஏராளமான நபர்கள் இப்படி ஏமாந்திருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து பிரவீன்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via