பாலியல் மாத்திரை சாப்பிட்டு இளைஞர் கொடூரம்

by Staff / 16-11-2022 10:58:18am
பாலியல் மாத்திரை சாப்பிட்டு இளைஞர் கொடூரம்

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை கவனித்த ராஜா கௌதம் என்ற 25 வயது இளைஞர், திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து அந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் ஊக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு அந்த மாணவியை முரட்டுத்தனமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இளைஞரின் இந்த மோசமான செயலால் மாணவியின் அந்தரங்க பகுதியில் இருந்து ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார். இந்நிலையில், வீட்டில் மயங்கி கிடந்த மாணவி அதிக ரத்தப்போக்கினால் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மாணவி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.பின்னர், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராஜாகவுதம் என்கிற அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via