சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் இயக்கம்.

by Editor / 17-11-2022 08:57:34am
சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் இயக்கம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. அடுத்த மாதம் 27-ம் தேதி வரை மொத்தம் 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்குச் சிறு வழிப்பாதை, பெரு வழிப்பாதை என அனைத்து பாதைகள் வழியாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளது. மேலும், இன்று முதல் அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள், குளிர்சாதனமில்லா பேருந்துகள் சபரிமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது.


இந்த பேருந்துகளின் முன்பதிவுகளுக்கு http://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 94450 14452, 94450 17793 என்ற தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

குளிர்சாதனம் இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ULTRA DELUXE பேருந்து கட்டணம் 1,500 ரூபாய் என்றும் சென்னை பம்பா பயண கட்டணம் – உட்கார்ந்து செல்லக்கூடிய  பயணத்திற்கான கட்டணம் 1,100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி ஜனவரி 20-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துத்துறை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via