பெற்றோர் கண்டித்ததால் ஊழியர் தற்கொலை

by Staff / 17-11-2022 01:25:29pm
பெற்றோர் கண்டித்ததால்  ஊழியர் தற்கொலை

மயிலாடுதுறை அருகே உள்ள மல்லிகொல்லையை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் சீலன் (வயது 23). இவர் பரங்கிப்பேட்டை கீைரக்கார தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பரங்கிப்பேட்டை துறைமுக பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று தனது பெற்றோரிடம் செல்போ னில் நான் சபரிமலைக்கு மாலைபோட போகிறேன் என்று கூறி னார். அதற்கு பெற்றோர் இந்த ஆண்டு மாலை போட வேண்டாம். அடுத்த ஆண்டு சபரிமலைக்கு செல்லலாம் என தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த சீலன் தனது அறைக்கு வந்தார். அங்கு நைலான் கயிற்றால் மின்விசிறி யில் தூக்குபோட்டு தற்கொ லை செய்தார். நீண்டநேரம் கதவு திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுபற்றி பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ேபாலீசார் அறைகதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தூக்கில் தொங்கி ய சீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பரங்கிப்பேட்டை விரைந்தனர்.
 

 

Tags :

Share via