நிதி நிறுவன மோசடி தொடர்பாக கடத்தப்பட்டவர் 15 நிமிடத்தில் மீட்பு

by Staff / 17-11-2022 02:41:36pm
நிதி நிறுவன மோசடி தொடர்பாக கடத்தப்பட்டவர் 15 நிமிடத்தில் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐயம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜெய்கணேஷ். இவர் தனது இரு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் நின்று கொண்டிருந்த போதுதெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் ஜெய்கணேஷை வலுக்கட்டாயமாக ஏற்றி தப்பி சென்றுள்ளனர்.இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த உளவுத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சோனச்சலம் இதனை கண்டு காரினை படம் பிடித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு அனுப்பினார்.உடனடியாக செயல்பட்ட காவல்துறையினர் இரட்டை மண்டபம் அருகே காரினை மடக்கி அனைவரையும் கைது செய்து வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில் கடந்த காலங்களில் ஜெய்கணேஷ் தெலுங்கானா மாநிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு உடன் வேலை பார்த்த நண்பர் சந்திரபாபுவிடம் 16 லட்சம் ரூபாய் பெற்று ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த நிதி நிறுவனம் மூடப்பட்டதால் , ஜெய்கணேஷ் ஆந்திர மாநிலத்தில் இருந்து தனது சொந்த ஊரான அய்யம்பேட்டைக்கு குடி பெயர்ந்து விட்டார். சந்திரபாபு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில் இன்று அவரது கூட்டாளிகளான மகேஷ் (வயது 28)திருப்பாப் பட்டல் பள்ளி கிராமம் கொத்தா செரிவு தாலுகா அனந்தபூர் மாவட்டம், தெலுங்கனா, கிரி பாபு (32) , பெத்தம்பள்ளி கிராமம் சோடா பள்ளி தாலுகா சித்தூர் மாவட்டம், சந்திரசேகர் ( 29 ) அக்கம்பள்ளி கிராமம், அனந்தபூர் மாவட்ட, ம் தெலுங்கானா ஆகியோருடன் வந்து ஜெய்கணேஷை மேற்கண்ட காரில் கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

உளவுத்துறை காவல் அதிகாரி அளித்த உடனடி தகவலின் பெயரில் ரோந்து காவல்துறையினர் காரில் கடத்திச் செல்லப்பட்ட நபர் மற்றும் அதை மேற்கொண்ட நபர்கள் என அனைவரும் துரிதமாக 15 நிமிடங்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் அய்யம்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் பின் வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயவேலிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுபோன்று பல கோடி ரூபாய் பணத்தை இவர் பலரிடம் பெற்று முதலீடு செய்துள்ளது விசாரணை தெரிய வந்துள்ளது. நிதி நிறுவனங்களால் பல லட்சம் மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகி ஒரு நிலையில் இது போன்ற கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தினாலும் இது முன்னுதாரணமாக மாறக்கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

 

Tags :

Share via