டுவிட்டர் அலுவலகங்கள் மூடல்

by Staff / 18-11-2022 11:56:21am
டுவிட்டர் அலுவலகங்கள் மூடல்

டுவிட்டர் ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் வெளியேறுங்கள் என்ற எலன் மஸ்க்கின் உத்தரவை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனைத் தொடர்ந்து, அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி பெரும்பாலானோர் ராஜினாமா செய்துள்ள நிலையில் டுவிட்டரில் # RIP Twitter என்னும் ஹாஸ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.

 

Tags :

Share via