சாலையை கடந்த யானைக்கூட்டம் ஆபத்தை உணராமல் செல்பிஎடுத்த மக்கள்

by Editor / 19-11-2022 10:19:55pm
சாலையை கடந்த யானைக்கூட்டம் ஆபத்தை உணராமல் செல்பிஎடுத்த மக்கள்

கோவைமாவட்டம் வால்பாறை  அடுத்துள்ள எஸ்டேட்கள் உள்ளன.குறிப்பாக சங்கிலிரோடு, இஞ்சிப்பாறை, ஊசிமலை, வறட்டுப்பாறை, சோலையாறு, நடுமலை, அக்காமலை உள்ளிட்ட பல்வேறு  எஸ்டேட் பகுதியில் நூற்றுக்கும்  மேற்பட்ட யானைகள் தற்போது சபரிமலை சீசன் காரணமாக தனித்தனியாகவும்,  கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல்  நேரத்தில் யானைகள்  தேயிலை காட்டில் முகாமிட்டுள்ளதால்,  தொழிலாளர்கள் தேயிலை  பறிக்கும் பணியில்  ஈடுபட முடியாமல் அவதிப்பட்டனர், இதனிடையே  எஸ்டேட்களில் முகாமிட்டுள்ள யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் எஸ்டேட்டுகளில் யானைகள் தனித்தனி  கூட்டமாக முகாமிட்டுள்ளன. யானைகள்  நடமாடும் பகுதிகளில் தொழிலாளர்கள் தேயிலை  பறிக்க எஸ்டேட் நிர்வாகிகள் அனுமதிக்க  கூடாது.அதேபோல் யானைகள்  நடமாடும் பகுதிகளில்  இரவு நேரங்களில்  பொது மக்கள்  வெளியே தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.இந்த நிலையில் இன்று காலையில் வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்ததால் அந்தப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதன் காரணமாக ஆபத்தை உணராமல் அவ்வழியாக சென்ற பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யானைகள் நடந்துசெல்வதை தங்களின் உருவங்கள் தெரிய செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர் . 

 

Tags :

Share via