சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய சட்ட நடவடிக்கை - இந்து முன்னணி

by Staff / 03-09-2023 04:38:55pm
சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய சட்ட நடவடிக்கை - இந்து முன்னணி

பதவிப் பிரமாணத்துக்கு எதிராக செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகுதி நீக்கம் செய்யப்பட தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமையன்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கலந்து கொண்டது அவர் சார்ந்துள்ள துறைக்கு எதிரானது. பாராபட்சம் இல்லாமல் செயல்படுவேன் என்று அமைச்சராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது சட்ட மீறலாகும். சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்கவும், போற்றவும் ஏற்பட்டதுதான் திருக்கோயில்கள். அதனை பராமரிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டது தான் இந்து சமய அறநிலையத் துறை என தமிழக அரசு கூறுகிறது. ஆனால் சனாதனத்தை ஒழிக்க நடந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தமிழக அரசு திருக்கோயில்களை அழிக்க செயல்படும் மறைமுக திட்டமோ என சந்தேகம் எழுகிறது.

 

Tags :

Share via