இந்திய ரயில்வேயில் விரைவில்   ஹைட்ரஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்..?

by Editor / 07-05-2023 09:21:42am
இந்திய ரயில்வேயில் விரைவில்   ஹைட்ரஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்..?

ஜெர்மனியில் உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு 14 டீசல் ரயில்களுக்குப் பதிலாக இனி ஹைட்ரஜன் ரயில் மூலம் பசுமை போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. இந்தியாவிலும் இத்தகைய முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை-புனே வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய ரயில்வேக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசலில் இயங்கும் DEMU (டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில் டீசலுக்குப் பதிலாக ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். ஹைட்ரஜன் ரயில்களின் வருகையால், எரிபொருள் பயன்பாட்டில் பெரும் குறைப்பு ஏற்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 2.3 கோடி லிட்டர் எரிபொருள் மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ரயில்வேக்கு பெரும் லாபம் கிடைக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : ஹைட்ரஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்.

Share via