அனைத்து வாகனங்களும் செல்ல தடை: காப்பாற்றப்படும் காவிரி ஆற்றுப்பாலம்

by Editor / 19-11-2022 11:06:10pm
அனைத்து வாகனங்களும் செல்ல தடை: காப்பாற்றப்படும் காவிரி ஆற்றுப்பாலம்

ஸ்ரீரங்கத்தை திருச்சியோடு இணைக்கும் முக்கிய தரை வழிப்பாதை இந்தக் காவிரி ஆற்றுப் பாலம்.சுமார் 46 ஆண்டுகளுக்கு முன்னர் 1976 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த காவிரி ஆற்றுப்பாலம், தற்போது கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு அதனுடைய உறுதித் தன்மையை இழந்துவருகிறது. அதையும் மிஞ்சி கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் ஏற்படும் அதிர்வுகள் காவிரியில் காற்று வாங்க வருபவர்களுக்குள் அச்சத்தின் உச்சத்திற்கே செல்லும் சூழலை ஏற்படுத்துகிறது. எனவே தொடர்ந்து மராமத்துப் பணிகள் செய்வதற்குப் பதிலாக புதிய பாலத்தையே கட்டினால் சிறப்பாக இருக்கும்என்ற கோரிக்கைகள் நாளுக்குநாள் வலுபெற்று வருகிறது.புதிய பாலம் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பும் திருச்சிமக்களிடையே உள்ளது.இந்த நிலையில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக திருச்சி காவேரி ஆற்றுப் பாலம் வரும் 20ம் தேதி நள்ளிரவு முதல் மூடப்படுகிறது.கடந்த செப்டம்பர் முதல் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இருசக்கர வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via