டிஜிட்டல் மீடியாவை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் - மத்திய அமைச்சர்

by Staff / 24-11-2022 03:29:10pm
டிஜிட்டல் மீடியாவை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் - மத்திய அமைச்சர்

டிஜிட்டல் மீடியாவை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். செய்தித்தாள்களை பதிவு செய்யும் செயல்முறை எளிமையாக்கப்படும் என்றும், 'புத்தகங்களை அச்சிடுதல் மற்றும் பதிவு செய்தல்' சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரபல இந்தி நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக விரைவில் புதிய மசோதா கொண்டு வரப்படும் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார். தற்போது சுமார் நான்கு மாதங்கள் எடுக்கும் நாளிதழ்களை பதிவு செய்யும் செயல்முறையை ஒரு வாரத்தில் ஆன்லைனில் முடிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நாளிதழ்கள் சரியான செய்திகளை உண்மைத்தன்மையுடன், சரியான நேரத்தில் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அரசின் குறைபாடுகளுடன் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பத்திரிகைகள் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அனுராக் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via